கண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தயில் கட்டிடமொன்று தாழிறங்கிய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வீட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்திய சாலை பணிப்பாளர் எஸ்.கே.ரட்நாயக்கா தெரிவித்தார்.

இக்குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடம் இன்று காலை 5 மணியளவில் தாழிறங்கியுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.