அரச ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு பத்திக் கைத்தறி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்றைய தினம் (20) பன்னல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேசிய ஆடை எனும் போது ஆண்கள் என்றால் சேர்ட் ஆக இருக்கலாம். பெண்கள் என்றால் சாரியாக இருக்கலாம். பத்திக் ஆக இருக்கலாம். ஆனால், அவை தொடர்பான நடைமுறைகளை தயாரித்து வருகிறோம்.

இது தொடர்பில் சட்டம் எதுவும் இல்லை. ஆயினும், தேசிய கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு உள்நாட்டு உற்பத்திகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.