*சீரழிகின்ற ஆடைக் கலாச்சாரம்*


நைட்டிகளாக மாறும் ஹபாயாக்கள்
அணிந்தும் அணியாத நிர்வாண நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

விலை கொடுத்து வாங்கி மாற்றான் கண்களுக்கு பிறந்த மேனியாய் உடல் அங்க அவயங்களை விருந்தாக்கும் அவலம் தற்போதைய இஸ்லாமிய பெண்களிடம் அரங்கேறிக்கொண்டுள்ளது.

சொந்த தாய் , மகள் , சகோதரி ,மனைவி புர்க்கா அணிந்தும் நிர்வாணமாக சுற்றுவதை பார்த்தும் கண்டிக்காது உறுதுணையாக இருக்கும் அனைத்து தந்தை , கணவன் , மகன் , சகோதரன் போன்றோர் மறுமையில் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தப்பவே முடியாது !

மார்க்ம்பேசிவிட்டு வீட்டில் உள்ளவர்களைத் தடுக்காத இவர்கள் ஆண்கள் என்று வீராப்பு பேசுவதற்கு அருகதை உள்ளவர்களா ?

எப்படி வட்டி வாங்குபவர் கொடுப்பவர் கணக்குஎழுதி வைப்பவர் சாட்சி சொல்பவர் என அனைவரும் பாவத்தில் சமமானவர்களோ! அதுபோல்

ஊரில் இவ்வாறான மெல்லிய ,வண்ண வண்ண இருக்கமான நைட்டி போன்ற புர்க்கா, ஹபாயாக்களை வாங்கிகேட்பவர்கள் வாங்கி கொடுப்பவர்கள் ,விற்பனை செய்வோர் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விபச்சாரத்தை தூண்டும் குற்றத்திற்கு ஆளாகின்றனர் என்பதே உண்மை . 

விற்பனையாளர்களே நீங்கள் இவ்வாறான கேவலமான ஹபாயாக்களை உங்களது வீட்டு சொந்த குமரிகளுக்கு அணிவித்து அழகு  பாருங்களேன் . நீங்கள் உங்ளது பிள்ளைகளுக்கு விரும்பாததை ஏன் வியாபாரம் என்ற பெயரில் மற்றவர்களின் உடல் அங்கங்களை உலகிற்கு காட்சிப் படுத்துகிறீர்கள் . 

வாங்குவது நிறுத்தப்பட்டால்
விற்பனை தானாக நின்றுவிடும்!

நாம் கேட்பது இதுதான் , பெற்றோர்கள் கணவன்மார்கள் இது குறித்து கூடிய கவணம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும் . மார்க்கம் உதறித்தள்ளப்பட்டு அந்நிய சக்திகள் ஊடுருவி நமது இளய சமுதாயத்தை ஆபாசத்தின் பக்கம் அழைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன .

நபியவர்கள் கூறியது போல் " ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! அவர்களது பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவார்கள்." 

இவை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட (புர்க்கா) ஹபாயாக்களா ? அல்லது முஸ்லிம் பெண்கள் நடந்து சென்றால் காமபார்வையுடன் பார்க்க தூண்டும் பேஷன் ஆடைகளா?
மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் .

வல்லாஹி , இஸ்லாத்தின் எதிரிகள் சிறப்பாக திட்டம் தீட்டி முஸ்லிம்களை நாசத்திற்குக் கொண்டு செல்கின்றார்கள் .
நமது ஆண்களும் பெண்களும் 
அதற்கு அடிமையாகிவிட்டார்கள்.

மார்பு பகுதிக்கு ஒரு தனிக்கலர் அங்கே ஹார்ட் போல் ஸ்டோன்ஒர்க்,
முழங்கைப்பகுதிக்கு தனிக்கலர் மற்றும் ஸ்டோன்ஒர்க்
இரு கால்களுக்கு மத்தியில் தனிக்கலர் மற்றும் துணியை அங்கே கிழித்து தொங்கவிட்டுக்கொள்வது
மேலும் முன்பகுதியையும்  பின்பகுதியையும் இருக்கமாக பிதுக்கமாக காண்பிப்பது.

இவற்றை அணிவதை விட அணியாமல் பிறந்த மேனியாக போவது மேல் ;  ஏனெனில் இரண்டும் ஒரு நிலையாகத் தான் இங்கு விளங்குகிறது .
இதனை விற்போர் , கொள்முதல் செய்வோர் , தமது மனைவி  பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்போர் , அத்தோடு இவற்றை அணிந்து வெளியில் சென்று ஆண்களை பாவத்தின் பால் ஈர்ப்போர் அனைவருக்கும் விபச்சாரக் குற்றம் வந்தே தீரும் .

ஆடை அணிவது உடலை மறைப்பதற்கு , ஆனால் இன்று ஆடை வெறும் உடலில் இருக்கும் தோல் போன்று ஒட்டியதாகவும் , மெல்லியதாகவும் இருக்கமாகவும் இருக்கின்றது . கேட்டால் fashion ஆம் .

உண்மையில் விபச்சாரம் பல வழிகளில் நம்மை அறியாமலே சமூகத்தில் ஊடுருவியிருக்கின்றது .

எனவே பொறுப்புதாரிகளே ! தயவுசெய்து சமூகத்திற்கு விளிப்பூட்டுவது உங்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் இந்த கேவலமான கேடுகெட்ட அனாச்சாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் .

இப்படிப்பட்ட ஆடைகளை விரும்பும் பெண்களையும்  ஆண்களையும் திருமணம் செய்யாதீர்கள்!

உடையில் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள்?
உண்மையில் எப்படி இஸ்லாத்தைப் பின்பற்றுவார்கள்?

வல்ல அல்லாஹ் இந்த அனாச்சாரத்திலிருந்து எமது முஸ்லிம் பெண்மணிகளைக் காத்தருள்வானாக .

எனவே எல்லோரும் இவ்விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கேடுகெட்ட ஆடைப் பழக்கங்களிலிருந்து எம் இளம் பெண்களையும் , வாலிபர்களையும் பாதுகாப்போம்....... !!!! 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.