கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகைள் சிலாபம் மாதம்பையில் நேற்று (15) இடம்பெற்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குப் பலியான 13வது நபர் இவராவார். பஹ்ரெய்னில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதான முதியவரே நோய்க்குப் பலியானார். இவர் நுகேகொடயைச் சேர்ந்தவர். கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர்.

இலங்கையில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3262 ஆகும். இவர்களுள் 3005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

மொத்தமாக 244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.