(எம்.மனோசித்ரா)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது பொதுவான நிலைப்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

20 குறித்து ஆராய்வதற்காக சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்து சுயாதீனமாக ஆராயும் என்று கூறப்பட்ட போதிலும் இதுவரையில் குழு நியமிக்கப்படாமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படுகின்ற குழுவின் அறிக்கைக்கு அமையவே எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

இவ்வாரத்தில் 20 தொடர்பில் ஆராயும் குழு நியமிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த குழுவினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளுக்கு அமைய சுதந்திர கட்சி அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும். அதனால் தற்போது விரிவாக எந்த கருத்தையும் எம்மால் கூற முடியாது என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.