20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கத்திற்குள் இருக்கும் அணியினருக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரின் அணிக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் அணியினர், அது பசில் ராஜபக்சவின் தேவைக்கு அமைய கொண்டு வரப்பட்டது என நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றம் சுமத்தி வருவதால், இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்ட போது, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார , பல முறை பசில் ராஜபக்சவின் பெயரை குறிப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேவை எனில், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாது அவர், அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார உட்பட 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அணியினர் கூறியுள்ளனர்.

எனினும் பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மேலும் சில அமைச்சர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதனை தவிர அமைச்சர் விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச போன்றோர், பசில் ராஜபக்சவுக்கு எதிரான கருத்தை மறைமுகமாக முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஆளும் கட்சியினருக்கு எதிராக பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

(Stephen)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.