நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாக வழங்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்திற்கு வரும் பொது மக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் அறிவிக்கும் வரையில் திணைக்களத்தினால் ஒரு நாள் மற்றும் வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.