நேற்றைய தினம் (08) தற்காலிகமாக மூடப்பட்ட மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்றைய தினம் (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

இதற்கமைவாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 85 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இவர்களுக்கு பதிலாக புதியவர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.