இன்று ஆரம்பமான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையும் ரயில்வே திணைக்களமும் தெரிவித்துள்ளது.

பரீட்சை நேர அட்டவணைக்கு அமைவாக விசேட ரயில் சேவை இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக விசேட ரயில் பெட்டிகளுடனான 2 ரயில்கள் சேவையில் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டையை அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னர் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இந்த விசேட ரயில்களில் பயணிக்க முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காக விசேட பஸ் சேவைகளும் இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.