நாட்டில் தற்போது நிலவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

கம்பனிகள் பதிவாளர் நாயகம் டி.என்.ஆர். சிறிவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கம்பனிகளை பதிவு செய்தல், சங்கங்களை பதிவு செய்தல், பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இணைய வழி மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சகல விடங்களையும் திணைக்களத்தின் வலைத்தளத்தின் ஊடாகவும் www.drc.gov.lk மற்றும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம் என கம்பனிகள் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கம்பனிகளை பதிவு செய்தல் - 011 - 2689616

பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் - 011-2689215

தகவல் தொழிநுட்ப பிரிவு - 011-2689239

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.