போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூகொட பொலிஸாரின் கண்காணிப்பிலிருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பூகொட பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.