பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை விரைவில் இணையவழி மூலம் (Online) மூலம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் ஒன்லைன் பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் ஒன்லைன் மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.