சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தலைமறைவான ஜப்பான் நாட்டு சிறுமி (15 வயது) மற்றும் இலங்கை இளைஞன் (24 வயது) ஆகியோர் கொச்சிக்கடை பொலிஸாரால் நேற்று (25) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாயாரினால் இலங்கை பொலிஸ் மற்றும் ஜப்பான் தூதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து, சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, கொச்சிக்கடையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் காதலனின் சகோதரியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜப்பானில் இருந்து தனது காதலியின் தாய் இலங்கைக்கு வருவதை அறிந்த இளைஞர், தனது சகோதரியின் உதவியுடன் சுற்றுலா ஹோட்டலில் இருந்து காதலியுடன் மீண்டும் தலைமறைவானார்.

அதனையடுத்து,  கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபரின் தாய், சகோதரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்த,  குறித்த இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நீர்கொழும்பு, கொச்சிக்கடையைச் சேர்ந்த இளைஞனும், குறித்த ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

(TamilMirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.