கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளை வைத்து பொறியியலாளர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கொண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள கலாநிதி ஏ.டபிள்யூ.எம். றஸ்மி, கலாநிதி ஏ.எம்.எம். சியாத், கலாநிதி எம்.சீ.எம். நஸ்வி, கலாநிதி ஏ.எம்.ஏ. சஜா, கலாநிதி  எம்.எம். ஜுனைதீன் மற்றும் பொறியியலாளர் எம்.சீ. றியாஸ் ஆகியோர் இணைந்தே இந்த அறிக்கையினை தயாரித்துள்ளனர். 

ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் சிவில் அமைப்புக்களிற்கு உதவும் வகையில் கடந்த மே மாதம் இவ்வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கொவிட் - 19 இனால் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான வழிகாட்டல்களாகும்.


குறித்த அறிக்கையின் சுருக்கம்

கொவிட் - 19 இனால் மரணமடைந்நதவர்களின் இறந்த உடல்களை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டியில் அடக்கம் செய்வதை தகனம் செய்வதை அனுமதிக்கின்றது. 

இலங்கையில் கொவிட் - 19 உடன் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வது சமய மற்றும் கலாசாரப் பாரம்பரியங்கள் காரணமாக நல்லடக்கம் செய்வதனை வழக்காகக் கொண்டிருக்கின்ற மேலதிக ஆழ்ந்த துன்பத்தினை உண்டுபண்ணுகின்றது. 

கொவிட் - 19 இனால் தொற்றுக்குள்ளானவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் எழுதப்பட்ட பிரதான அக்கறைகள் இறந்த உடல்களைப் அடக்கம் செய்வதில் உள்ள தவறான முகாமைத்துவம், பாதுகாப்பான செயற்பாடுகள், நில நீருடன் மாசுபடுவதற்கான சாத்தியத்தன்மை என்பவற்றை உள்ளடக்குகின்றன. 

தற்போது காணப்படும் விஞ்ஞான ரீதியான ஏடுகள் மற்றும் எழுத்துக்கள், கொவிட் - 19 நோயாளிகளைக் கையாளுவது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டு நெறிகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை பின்வரும் பிரதான அக்கறைகளைக் கையாளுகின்ற கொவிட் - 19 இனால் தொற்றுக்குட்பட்டவர்களின் இறந்த உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கை முறைகளின் தொகுதியொன்றை முன்வைக்கின்றது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.