கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 10,000/=  பெறுமதியான உணவு பொதி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பமானது.

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா. 10,000/=  பெறுமதியான உணவு பொதி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொரோனா நோய் முதலாவது மற்றும் இரண்டாவது தொற்றுக்குள்ளானவர்கள் என்பதினால் தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ,கொழும்பு மாவட்டத்தில் வாழைத்தோட்டம், குணசிங்கபுர, டயஸ் பிளேஸ் மாடி குடியிருப் பாளர்களுக்கு  அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் அத்தியவசிய உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (2020.11.01) கொழும்பு மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பிரதீப் யசரத்ன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.image 3இந்த வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக கொழும்பு மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பிரதீப் யசரத்ன தலைமையில் கெஸ்பாவ பிரதேச செயலாளர் பிரிவின் தெல்தர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.image

இதேபோன்று, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களின் பயண வரையறைக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைகளில் பணிகளில் ஈடுப்பட்டுள்ள பொலிசாருக்காக சமூக பொலிஸ் பிரிவின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் உணவு பொதி விநியோகமும்  இடம்பெற்றது. அத்தோடு இந்நிகழ்வில் கொழும்பு பிரதேச செயலாளர் திருமதி. காஞ்சனா குணவர்தன மற்றும் உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கு மேலதிகமாக கொலன்னாவ, மஹரமக மொறட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பழங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள்; வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.