இன்றைய தினம் (07) 449 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 445 பேர் திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் எனவும், 3 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் தனிமைப்படுத்தலில் இருப்பவர் எனவும் தெரியவருகிறது.

இதுவரை குறித்த கொத்தணியில் மொத்தமாக 9937 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை நாட்டில் மொத்தமாக 13,419 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 5662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.