கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து  சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) இனால் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேம்நாத் தோலவத்த தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை எனவும், இவ்வாறான போலியான கடிதங்கள் காரணமாக அரசாங்கம் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.