ஜனக பண்டார தென்னகோனிற்கு எதிரான குற்றப்பத்திரிகை இரத்து 1999 ஆம் ஆண்டில் நடந்த கொலைசம்பவம் தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை இரத்து செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியவர்களினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதனை இரத்து செய்யுமாறு கோரி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பில் தீர்பளிக்கும் போது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ்


, மனுதாரருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நடத்திச் செல்லப்பட்ட வழக்கு சட்டத்திற்கு உட்பட்டதில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.