கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த பரீட்சையை நடத்துவதற்கான திகதி, சுமார் 6 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான சூழல் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.