உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாமல் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அரசாங்கத்தின் இழப்பில் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான செலவீனங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு,

உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் முன்வராத கொவிட் 19 தொற்றினால் மரணித்த நபர்கள் சிலரின் பிரேதங்கள் அரசாங்க வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் ஒன்று சேர்ந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் அவ்வாறான பிரேதங்களை உடனடியாக சுகாதார முறைகளைப் பேணி அரசாங்கத்தின் செலவில் எரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான செலவீனங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.