கொரோனாவினால் இறக்கும் நபர்களை புதைக்க அனுமதிக்குமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை தொடர்பாக நேற்று நிபுணர் குழுவுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நிபுணர்குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாக அறிய வருகிறது.

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிங்களின் உடல்களை புதைக்க அனுமதிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதோடு சர்வதேச மட்டத்திலும் இது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முஸ்லிம் எம்.பிகள் குழுவொன்றும் பிரதமரை சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தது. இந்த நிலையில் மனிதாபிமான ரீதியில் இந்த விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு நிபுணர் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே நேற்று முக்கிய சந்திப்பொன்று சுகாதார அமைச்சுருடன் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படாத போதும் சந்திப்பு சாதகமாக இருந்ததாக அறிய வருகிறது.

இதே வேளை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் எம்.பிகள் இன்று உயர்மட்ட ஆளும் தரப்பு தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அறிய வருகிறது.இம்மாத இறுதிக்குள் சாதகமான முடிவொன்று கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (TN)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.