- புதிய பாடத்திட்ட பொறியியல், பௌதீக விஞ்ஞான மாணவர்கள் 42 பேர் மனு

பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களில் மாணவர்களை அனுமதிப்பதை இடைநிறுத்துவதற்கான உத்தரவு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்று (23), உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் குழாம் இம்முடிவை அறிவித்ள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் மூன்று நாட்களாக குறித்த மனு பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2019 உயர் தரப் பரீட்சைக்கு தோற்றி பாதிக்கப்பட்ட 42 மாணவர்களால், குறித்த பெறுபேறுகளுக்கு அமைவாக, இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிட்டபட்டிருந்தனர்.

தாங்கள், புதிய பாடத்திட்டத்தின் கீழ் கணிதம், இராயனவியல், பௌதீக விஞ்ஞானம் ஆகிய பாடங்களின் அடிப்படையில், கடந்த வருடம் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும், அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றிய மாணவர்களை இணைப்பதற்கான இஸட் புள்ளிகளுக்கு இடையே பாரிய இடைவெளி காணப்படுவதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என அறிவிக்குமாறும், இரண்டு பாடத்திட்டங்களுக்கும் சமமான அல்லது நியாயமான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வலியுறுத்துமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.