இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

அதன்படி நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் துறைமுக நகரத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றது.

அதேபோன்று 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாக ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் டயர் தொழிற்சாலையை ஒத்த டயர் தொழிற்சாலை ஒன்றை மதுகம பகுதியில் நிர்மாணிக்க சீன அரசு எதிர்பார்ப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.

சீன அரசினால் இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை ஒன்றை அடுத்த ஆண்டில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதுடன், அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய தூண்டுதல் ஒன்றை வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு சீன பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யுமாறு சீன தூதுவர் இதன்போது மஹிந்த யாப்பா அபாயவர்தன அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதன்போது சீன அரசினால் ருஹுணு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியுதவியினை அதன் உப வேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவிடம் கையளித்ததுடன் இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.


பணிப்பாளர் (தொடர்பாடல்)

இலங்கை பாராளுமன்றம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.