இன்றைய தினம் (19) 06 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

விபரம்:

கொழும்பு 14 இனை சேர்ந்த 39 வயதுடைய பெண் இன்று (19) ஐடிஎச் வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

வீரகுல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் நேற்றைய தினம் (18) வதுபிடிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்

கொழும்பு 15 இனை சேர்ந்த 77 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (17) அனுமதிக்கும் போது மரணித்துள்ளார்

கொழும்பு 10 இனை சேர்ந்த 76 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது (17) மரணித்துள்ளார்

கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் நேற்று (18) வீட்டில் மரணித்துள்ளார்

பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான பெண் நேற்று (18) வீட்டில் மரணித்துள்ளார்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.