நாளைய தினம் (14)  நாட்டிலுள்ள மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகவும், சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் கொவிட் 19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டம்

நாளை (14) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்

 • சிரிசந்த செவன வீடமைப்புத் திட்டம்
 • சிரிமுது உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு)
 • லக்ஹிரு செவன புகையிரத வீடமைப்பு (மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு)
 • சிரிசர உயன (பொரளை பொலிஸ் பிரிவு)

புதிதாக நாளை அதிகாலை 5.00 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

 • மயூர ப்ளேஸ் (வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு)

கம்பஹா மாவட்டம்

நாளை (14) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவு

 • கெரவலபிடிய கிராம சேவகர் பிரிவு
 • ஹேகித்த கிராம சேவகர் பிரிவு
 • குருந்துஹேன கிராம சேவகர் பிரிவு
 • எவரிவத்த கிராம சேவகர் பிரிவு
 • வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவு

பேலியகொடை பொலிஸ் பிரிவு

 • பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு

புதிதாக நாளை அதிகாலை 5.00 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவு

 • கெரவலபிடிய கிராம சேவகர் பிரிவிலுள்ள நயிதுவ பிரதேசம்
 • வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள துவேவத்த பிரதேசம்

பேலியகொடை பொலிஸ் பிரிவு

 • பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள விகாரை மாவத்தை

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

 • ஹுணுபிடிய வடக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள வெதிகந்த பிரதேசம்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவு

 • திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வாரண விகாரை வீதி, கத்தொட வீதி மற்றும் ஹிஜ்ரா மாவத்தைக்கு உட்படும் பகுதி

களுத்துறை மாவட்டம்

புதிதாக நாளை அதிகாலை 5.00 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

 • புளத்சிங்கள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள்
 • குடா ஹினிடியன்கல்ல பிரதேசத்தின் மரிக்கார் மாவத்தை

இவை தவிர ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.