நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்மறையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்ட நாட்டினையே கடந்த வருடம் நாங்கள் பொறுப்பெடுத்தோம். தற்போதைய அரசாங்கம் சுதேச விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு வருகிறது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

'நாடு சர்வதிகாரம் ஒன்றின் கீழ் ஆளப்படுகிறது' என்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடனும் சென்று முறையிடுவதற்கு உரிய முயற்சிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் மேற்கத்திய சக்திகளுக்கு பதிலளிக்கும் அரசாங்கம் அல்ல, தற்போதைய அரசாங்கம் நாட்டின் சுதந்திரம் மற்றும் சுதேச விடயங்களுக்கும் எப்போதும் மதிப்பளிக்க்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மரதகஹமுல துணி நெசவாளர்களின் கூட்டுறவுச் சங்கம் மற்றும் அந்த தொழிற்சாலையின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக விசேட கண்காணிப்பு விஜயத்தின் போதே இன்று (13) பங்கேற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் படி உள்நாட்டு கைத்தொழில் மற்றும் அதில் ஈடுபடும் தொழிலாளர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்தத் தொழிற்சாலை தற்போது சுமார் 50 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதுடன், உள்ளூர் கைத்தறிகளைப் பயன்படுத்தி சாரி, சாரம், படுக்கை விரிப்புக்கள் உட்பட ஆடை வகைகள் இங்கே தயாரிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மரதகஹமுல துணி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜகத் குமார மற்றும் உப தலைவர் ஜீ. கருணஜீவ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.