கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 6 யோசனைகளை நேற்று முன்தினம் (29) முன்வைத்துள்ளன.

அவற்றில் தெரிவித்திருப்பதாவது,

* பூகோள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காக மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கி அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

CICT நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு நிகரான ஒப்பந்தத்தை கைச்சாத்திடல் வேண்டும்.

* கிழக்கு முனையத்தை வழங்குவதற்கான முடிவு, மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்தல் என்பவற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை ஒரே தடவையில் பெறல் வேண்டும்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றியம் நேற்று மாலை ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

* மேற்கு முனையம் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கும்.

* கிழக்கு முனையத்தின் நூறு வீதமான உரிமை மற்றும் முகாமைத்துவம் துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்து அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.