புத்த சாசனத்துக்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக " மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டத்தின்"  திட்ட அறிக்கையை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் தேரர்களுக்கு வழங்கும் வைபவம் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவினால் கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரையில் நடைபெற்றது.

அமைச்சர் முதலில் அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று ஷயாமோபாலி வம்சத்தின் அஸ்கிரிய விகாரை பீடத்தின் தலைமை ஆவண அதிகாரி அதி வணக்கத்துக்குரிய டாக்டர். மெதகம தம்மானந்த் தேரரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டம் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு அதன் திட்ட அறிக்கையும் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் மல்வத்து மகா விகாரையைப் பார்வையிட்டு, ஷயாமோபாலி வம்சத்தின் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க அதி வணக்கத்துக்குரிய  நியங்கொட விஜிதசிறி தேரரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு இந்த வீட்டுத் திட்டம் பற்றி அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் " அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் நாட்டில் பலவீனமான எதிர்க்கட்சித் தலைவரும் பலவீனமான எதிர்க்கட்சியும் இன்று எமது நாட்டில் உள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் கடந்த காலங்களில் தன்னுடைய செல்வாக்கை கட்டியெழுப்புவதற்காகப் பாரிய பிரச்சாரங்களைக் கொண்டு சென்ற போதும் நாட்டுக்காக எந்தப் பணியையும் ஆற்றவில்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது வீடமைப்பு அமைச்சையும் அதன் துணை நிறுவனங்களையும் வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற ஒரு தலைவராகவே இருந்தார்.

இன்று அவர் செய்வது யாதெனில் எதிர்க்கட்சியை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதாகும். பாட்டலி அணியும் சஜித் அணியும் ஒரே நிலைக்கு வந்து விட்டன. எதிர்க்கட்சி இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் எதிர்க்கட்சியின் பங்கை சரியாகச் செயல்படுத்த முடியாது.

MMC இற்கு எதிராக அணி திரள்வோம் கப்பல் துறைக்கு எதிராக அணி திரள்வோம் என்று அட்டைகளை ஏந்தி நின்றாலும் அந்த அட்டைகளின் எண்ணிக்கை அளவிலான மக்கள் தொகையினையாவது திரட்டுவதற்கு ஜே.வி.பி.இற்கு இன்று இயலாமல் சென்றுள்ளது. 3% ஆக இருந்த மக்கள் ஆதரவு இரு பாராளுமன்ற உறுப்பினர்களாக வீழ்ச்சியடைந்ததனைத் தொடர்ந்து அநுர குமார திசாநாயக்கவுக்கு செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. ஜே.வி.பியை ஒரு தரகுக்கட்சியாகவே நான் பார்க்கிறேன். அத்துடன் ஒரு புரோக்கராகவும்.எவருடைய ஒப்பந்தத்தையாவது செய்வது தான் இவர்களுடைய வேலை".

இந்துராகாரே தம்மரத்ன தேரரின் எண்ணக்கருவுக்கமைய அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ மற்றும் கெளரவ பிரதமர் மற்றும் வீடமைப்ப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால " மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

இந்த வீடமைப்புத் திட்டத்தினூடாக புத்த சாசந்த்துக்காக தமது பிள்ளைகளை அர்ப்பணித்த வீடற்ற பெற்றோர்களுக்காக வீடமைக்கப்படுவதுடன் அதன் கீழ் முதலாவது வருடத்திற்குள 2000 வீடுகளை அமைப்பதற்காக வீடொன்றிற்கு தலா ரூபா 6 இலட்சம் என்ற அடிப்படைஅடிப்படையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழக கலாச்சார ஆய்வுப் பிரிவின் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் வண். இந்துராகாரே தம்மரத்ன தேரர் உட்பட மகா சங்கத்தினர்களும் கிராமிய வீடமைப்பு மற்றும் ரிர்மாணத்துறை  மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் திலும் ரத்னாயக்க மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







 







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.