நாட்டிலுள்ள மிருகக் காட்சிசாலைகள், சரணாலயங்கள் ஆகியன நாளை (01) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

தேசிய வனவிலங்குகள் பூங்காக்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, தேசிய வனவிலங்குகள் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் யானைகள் காப்பகம், ரிதியகம சபாரி பூங்கா ஆகியன இவ்வாறு நாளை (01) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கொவிட்-19 பரவலின் இரண்டாவது அலை காரணமாக இவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இதேவேளை, பின்னவல யானைகள் சரணாலயம், வாரத்தின் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் திறந்திருக்கும் என, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தற்போதுள்ள நிலைமைகளின் கீழ், மறு  அறிவிப்பு வரும் வரை, பின்னவல யானைகள் அனாதை இல்லத்திற்கு வருபவர்களுக்கு யானை சவாரி, உணவளித்தல் என்பனவற்றுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக இடைவெளி பேணுதல் உளளிட்ட பல்வேறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிவுறுத்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், பார்வையாளர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்வதற்கான படிவமொன்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:

தெஹிவளை மிருகக்காட்சிசாலை - 011 2712751

பின்னவல யானைகள் அனாதை இல்லம் - 035 2266116

பின்னவல மிருகக்காட்சிசாலை - 035 2266641

ரிதியகம சபாரி பூங்கா - 047 3620410 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.