உயிர்த்த ஞாயிறு தக்குதல் சம்பவத்தில் இன்றும் உயிரோடு இருக்கும் பிரதான சந்தேக நபர் சாரா என்பவர் மாத்திரமே. இவரை இந்தியாவிலிருந்து ஏன் அழைத்துவரப்படவில்லையென எவரும் கேட்கவில்லை. இவர் இந்தியாவுக்குச் செல்ல மன்னார் வரை அழைத்துச் சென்றதாக  கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சாராவை வைத்துக் கொண்டு இந்தியா - இலங்கைக்கு ஆதிக்கம் செலுத்துகின்றதா? என்ற ஓர் சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசாங்கம் இன்னும் உத்தியோகபூர்வமாக அழைத்து வர இந்தியாவிடம் ஏன் கேட்க வில்லை. இந்திய வெளிவிவகார ஆலோசகர், செயலாளர் என பலர் வந்துசென்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் எவரும் பேசவே இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை கையாளும் திறனை அரசாங்கம் இழந்து விட்டது.தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூக பரவலை இன்னும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் பெயர் கூறி கொத்தணிகள் உருவாகின, இன்று பெயர் கூற முடியுமான கொத்தணிகள் இல்லை. ஏனெனில் நாட்டின் சகல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.மக்கள் தொடர்பில் எந்த உணர்வுமற்றவர்கள் போன்று இந்த அரசாங்கம் செயற்படுகிறது.

இந்தியா வழங்கிய தடுப்பூசிகள் மூன்று இலட்சம் மக்களுக்கு தான் போதுமானது.மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்பதற்கான எந்த விடயமும் நடைபெறுவதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.