துறைமுக அதிகார சபையின் கீழ் காணப்படும் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கருத்துவேறுபாடுகள் எழுந்தள்ள நிலையில், துறைமுக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடலாம் என்பதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.