(எம்.றொசாந்த்) 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கடற்பரப்பில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால், இதுத் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு  கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

நெடுந்தீவு கடலில் நேற்று(19)  மூழ்கிய மீனவப் படகிலிருந்த மீனவர்களுடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினரால் நம்பப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.