நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்  இன்று (12) பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க  பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக நீதிமன்ற கடந்த 2017 இல் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.