கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் குடியேறிய கிராமங்களில் பழமைவாய்ந்த கிராமமாகக் கருதப்படும் அத்தனகல்லையில் வாழ்ந்த செய்கு அப்துல் காதிரி வலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கி.பி. 1621ஆம் ஆண்டு அடங்கப் பெற்றார்கள். அவர்களது ஸியாரம் அமைந்துள்ள இடத்திற்கு கடந்த வாரம் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

அவர்களது ஸியாரம் அமைந்துள்ள காணி பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியாக இருந்தாலும், அது சரியான முறையில் நிர்வகிக்கப்படாத நிலையில் பெரும்பான்மையினர் சிலர் அதனை கையகப்படுத்த முற்படுவதை அவதானிக்க முடிந்தது. நாம் அங்கு செல்லும்போது ஸியாரம் அமைந்துள்ள பகுதியின் மேல் குப்பைகள் கூட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஸியாரத்தின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சேதமைடந்திருந்தது. ஸியாரத்திற்கு அடையாளமாக இரண்டு கற்கள் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் இருப்பிற்கு மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் இந்த ஸியாரத்துடன் இணைந்த பகுதியை பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்.

 தகவல் : இப்ஹாம் நவாஸ்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.