Siyane News - கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களது உடல்களை அடக்கம் செய்வதற்கும் எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்ட வர்த்தமானி நேற்று முன்தினம் (25) சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் எதுவும் இதுவரை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படாத நிலையில் அதனை காரணமாக வைத்து, இன்றைய தினம் மரணித்த ஏறாவூரை சேர்ந்த ஒருவரது ஜனாஸாவை குருநாகல் வைத்தியசாலையில் கட்டாய தகனம் செய்வதற்கான முயற்சிகள் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதனையடுத்து அவர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைள் காரணமாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியாகும் வரை அந்த ஜனாஸாவை குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைப்பதற்கான  உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்று எந்தவொரு ஜனாஸாவையும் எரியூட்டாமல் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை அவசரமாக வழங்குமாறு பதில் சுகாதார அமைச்சர், சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்சா ஆகியோரிடம் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா வேண்டிக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அடக்கம் செய்வதற்கான இடங்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் அடையாளம் காணப்படவுள்ளதுடன் அது வரை உடல்கள் குளிருட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா வெளியிட்ட வீடியோ மற்றும் முக நூல் பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.



குருநாகல் வைத்தியசாலையில் உள்ள ஏறாவூர் சகோதரரின் ஜனாசாவை பிரேத அறையில் இடவசதி இல்லை என்பதாலும் , வர்த்தமானி அறிவிப்பு...

Posted by Seyed Ali Zahir Moulana on Saturday, 27 February 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.