க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை அனுமதி அட்டையில் நிலவும் குறைபாடுகளை இணையத்தளம் மூலம் திருத்தம் செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.  

இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தம் செய்து கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.  

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவும் ஒருவார காலத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.