இன்று(24) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேயசிங்க தெரிவித்த கருத்துக்கள்

இன்று நாட்டிற்கு மிக முக்கியமான நாளாகும்.நாட்டில் பல உயிர்களை காவு கொண்ட,அனைவரும் எதிர்பார்த்திருந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு ஒரு நாள் கடந்துள்ளது.ஐக்கிய மக்கள் சகதி இந்த அறிக்கையை பூரணத்துவமற்ற அறிக்கையாக பார்க்கிறது.அடிப்படை சூத்திரதாரிகள் குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை.இந்த தாக்குதலை உண்மையாக மேற்கொண்ட மூல சூத்திர தாரிகள் யார்? இவர்களை வழிநடத்தியவர்கள் யார்? பணபலம் வழங்கியது யார்? உள் நாட்டில் இயக்கியது யார்? அரசியல் பலம் வழங்கியது யார்? உண்மையான பின்னணி செயற்பாட்டாளர்கள் யார் எனபது தொடர்பாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது இந் நாட்டு மக்களுக்கு செய்த பாரிய துரோகமாகும்.

சாட்சியமளித்த ரவி செனவிரத்னவின் வாக்குமூலம் பாரதூரமானது.இந்த தாக்குதலுடன் தொடர்பான உண்மையான விபரங்களை அறியாவிட்டால் அது நாட்டின் தேசி பாதுகாப்பிற்கு பாதகமாக அமையும் என குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து அவதானம் செலுத்தி உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும்.

சஹ்ரான் உள்ளிட்ட 21 பேருக்கு 2012 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு அமைச்சால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.இதை கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களும் ஒப்புக் கொண்டார்.இது குறித்த எந்த பதிவுகளும் இல்லை.

சாரா யார்? அவர் இன்று இலங்கையில் இல்லை.அவர் இந்தியாவிற்கு எவ்வாறு சென்றார்? மற்றும் சஹ்ரானின் மனைவின் வாக்குமூலம் என்ன என்று வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் என்ன சாட்சியமாக கூறினார்? என்ற விடயங்களை இரகசியமாக உள்ளது. இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுருக்கவில்லை.

இதனால் தகவல்களை மறைக்காமல் உண்மைகளை தெரியப்படுத்துவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இதனால் தான் இந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பூரணத்தைமற்ற அறிக்கையாக பார்க்கிறது என்று தெரிவித்தார்.

இன்று நாட்டில் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. காடழிப்பு, தொல்பொருள் இடங்கள் அழிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு என்பன நாட்டின் நாலா பாகங்களிலும் இடம் பெறுகின்றன.சுற்றாடல் அமைச்சரும்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

வானூர்ந்திகள் மூலம் இவை கண்காணிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். ஆனால் இன்றும் சட்டவிரோத செயற்படுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் தான் உள்ளது.எனவே தான் இந்த அரசாங்கம் சகல துறையிலும் பொய் என்று கூறுகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.