10,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடக்கம் நிரந்தர நியமனம்!

Rihmy Hakeem
By -
0

 


10,000 பயிற்சி பட்டதாரிகளை இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 14,000 பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேர் அரச சேவையில் நிரந்தர நியமனம் பெறவிருப்பதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவர்களது பயிற்சிக்காலம் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று (22) முதல் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நிலமையில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த இளம் சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வைப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் அரசியலைக் கருத்திற்கொள்ளலாம் படிப்பை மாத்திரம் அடிப்படைத் தகைமையாகக் கருதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் http://pubad.gov.lk/web/images/latest_document/notices/2021/1422012c3b29c584ff5107f9023389ef-dos-grade-iii-appointment-2021-t.pdf  என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)