இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (02) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,242 இலிருந்து 83,552 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,422 இலிருந்து 80,020 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பேலியகொடை மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 291 பேர், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 12 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 07 பேர் ஆகிய 310 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.  

 இன்றையதினம் (02)  கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 598 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.