இலங்கை விமானப்படையினர் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடவுள்ளனர்.

இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு நாளை முதல் 05 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர்.

இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்வுகள்ளன. 

நன்றி : NewsNow Tamil 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.