வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரும் கோவிட் 19 இனால் ஏற்படும் மரணங்களை அடக்கம் செய்ய முடியாமல் இருப்பது கவலைக்குரியது எனவும், அரசாங்கம் உடனடியாக பேராசிரியர் ஜெனீபர் பெரேராவின் வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த இடமளிக்க வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

கோவிட் 19 இனால் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு உரிய வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தாமதித்து வருவதனால், பலருடைய சடலங்கள் இன்னும் குளிரூட்டிகளில் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் வெளியிட தாமதிக்கப்படுவது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.   (மு) 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.