காலி கோட்டைக்குள் நுழையும் பிரதான வாயில் இன்று (01) முதல் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என்று காலி மாநாகர சபை அறிவித்துள்ளது. 

இதன் புனர்நிர்மாணப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,  , நுழைவாயில் வளைவின் மேற்பகுதி பழுதுபார்க்கப்படவுள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த நுழைவாயில் கட்டப்பட்ட பின்னர் இதுபோன்ற புனர்நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இப்பணிகள் நடைபெறும் காலப்பகுதியில் சாரணர் மாவத்தையிலிருந்து நுழையக்கூடிய பழைய கோட்டை வாயில் மட்டுமே  கோட்டைக்குள் நுழைந்து வெளியேற பயன்படுத்த முடியும் என்றும் காலி மாநகர சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.   (மு)

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.