எதிர்வரும் வார றுதியில் நீண்ட விடுமுறை இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக அனர்த்த நிலையை புரிந்துகொண்டு தேசிய பொறுப்பாக கருதி செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் மத வைபவங்கள் இடம்பெறவுள்ளன. புத்தாண்டு வைபவங்களையும் நடத்துவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானமிக்க  சந்தர்ப்பத்தில் இந்த அனைத்தையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் கொவிட் 19 வைரஸ் புதிய திரிபு ஆகும். இது முன்னைய வைரசிலும் பார்க்க மாற்றத்தைக் கொண்டதாகும். சுனாமியைப்போன்று வேகமாக தற்பொழுது இந்தியா போன்ற நாடுகளில் பரவிவருகின்றது. இது எந்த வகை வைரசு தொற்று என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வைரசு தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு 14 நாட்களுக்கு பிறகே நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.

1 ஆவது, 2 ஆவது வைரசு தொற்று அலையின் போது நாட்டு மக்கள் அதனை பொறுப்புடன் செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதேபோன்று தற்போது நெருக்கடியான தொற்றுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாம் கரம்கூப்பி மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.