கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள்  தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.

இதேவேளை ,கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.

4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.