ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய' திட்டத்தின் 12 ஆவது கட்டமாக ரூ.2,805,000 மதிப்புள்ள மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக இன்று(14) வழங்கப்பட்டன.

அதன்படி,ரூ.2,130,000 மதிப்புள்ள அல்ட்ராசவுண்ட்(Ultrasound  Scanner)ஸ்கேனரும், ரூ.675,000 மதிப்புள்ள ஆட்டோகிளேவ் டேபிள் லேப்பும்(Autoclave Table Lap) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் வெளிநாட்டு கிளைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் இனைந்ததாக "ஜன சுவய" திட்டம் மற்றும் "எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு" திட்டத்தை செயல்படுத்துகின்றன.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.