நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்தமை தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக பல ஆறுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வெள்ள அனர்த்தம் பற்றிய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய களனி கங்கை, களுகங்கை ஜிங் கங்கை மகாவலி கங்கை ஆகிய ஆறுகளினதும், மகா ஓயா அத்தனகல்ல ஓயா ஆகியவற்றினதும் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 6 மாகாணங்களில் 9 ஆயிரத்து 96 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒருவர் காணாமல் போயுள்ளார். 215 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 13 தற்காப்பு நிலையங்களில் 76 குடும்பங்கள் தங்கியுள்ளனர். எனினும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் 6 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை இன்று மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.