தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (ஒன்லைன்) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தங்களுக்குள்ளாகிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு, ஓய்வு நேரம் வழங்காமல் நாள் முழுதும் வகுப்புக்களை நடத்தல் மற்றும் சிலவேளைகளில் காலை முதல் நள்ளிரவு வரை வகுப்புகளை நடத்துவது போன்ற சம்பவங்கள் முக்கியமாக குறிப்பிடப்படுகின்றன

மாணவர்கள் இணையவழி (ஒன்லைன்) மூலமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பாடசாலை சீருடைகளை அணிய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது..

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு மிகவும் பொருத்தமான ஆடைகளை அணிந்து, உரிய நேரத்திற்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.