ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு

புத்தியை முதலில் இழந்தால், அழிவு இரண்டாவதாக பின்தொடரும் என்று ஒரு பழமொழி உண்டு. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து இதைத்தான் இன்று அரசாங்கம் செய்து வருகிறது.கோவிட் தொற்றுநோயின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துவிட்டது. நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 30 இற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இன்று அரசாங்கம் மிகத் துல்லியமான தகவல்களைக் கூட மறைத்து வருகிறது.இது மிகப் பெரிய சோகமான நிலையாகும்.

அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கொரோனா தொற்றுநோயை தொடர்ந்து பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.கோவிட் முதலாம் அலையின் போது அதன் தாக்கம் குறித்து அரசாங்கம் கவலைப்படாமல் பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த நேரத்தில் செயல்பாட்டில் இருந்த தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டால் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்ப்படுத்தியபோதிலும், நாட்டில் ஆபத்து குறித்து எந்த கவலையும் இல்லாமல், நிலைமை அமைதியடைவதற்கு முன்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொற்றுநோயின் இரண்டாவது அலை குறித்த அவதானங்களை சுகாதாரத் துறையின் சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், அதற்குரிய முன்னாயத்தமில்லாத அரசாங்கம் இருபதாம் திருத்தத்தை நிறைவேற்ற விரும்பியது. கோவிட்டின் இரண்டாவது அலையை மறந்து, மூன்றாவது அலையின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அரசாங்கம் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது.

உருமாறிய வைரஸ் பரவலுக்குரிய அவதானம் நாட்டிற்குள்ளதாக சுகாதார தரப்பு எச்சரித்த போதும்,கொடிய உருமாறிய வைரஸ் பிறழ்வு பரவாமல் தடுப்பதற்கான ஒரு தனிமைப்படுத்தல் மையமாக நம் நாட்டை திறக்கவும் அரசாங்கம் உக்ரைனியர்களுக்கு அழைப்பு விடுத்தது மாத்திரமல்லாது இந்த நேரத்தில் இந்தியர்களை தனிமைப்படுத்தும் மையமாகவும் மாற்றியுள்ளது.இதன் விளைவுகளையே இன்று அநுபவிக்கிறோம்.அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அல்ல என்பது இதுலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் இறையான்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் போர்ட் சிட்டி சட்டத்தை நிறைவேற்றுவதை விரைவுபடுத்துவதற்காக இந்த மாதம் 19/20 ஆகிய தினங்களில் நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது என்பதிலிருந்து இது தெளிவாகிறது. கோவிட் மீது தடுப்பூசி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே அரசாங்கம் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்.  மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதறகாகவே,என்றாலும் அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் இந்த விடயம் இடம் பெறாமை நாட்டின் துரதிஷ்டமே.

கோவிட் பரவலை அதன் அரசியலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் நட்பு வட்டார பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த மனிதாபிமானமற்ற முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என்ற சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விடுத்த கோரிக்கையை நிராகரித்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.

கோவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் தருணத்தில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து ஒரு சர்வாதிகாரி போல செயல்படும் அரசாங்கத்தின் இந்தச் செயலை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

ஊடகப் பிரிவு,

ஐக்கிய மக்கள் சக்தி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.