தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றை தினம் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததால் காரணத்தால் தனக்கு இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என அவர் அறிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். (Fys)
நன்றி : அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.