உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் இன்று(20) காலை பாராளுமன்ற சுற்றுவட்டம் ஜயந்திபுர நுழைவாயில் அருகாமையில் இடம் பெற்றது.

இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் "அன்று தொன் ஜுவான் தர்மபால, இன்று தொன் ஜுவான் நந்தசேன", "சேர் வெட்கம், மிகவும் அசிங்கம்" போன்ற வசனங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதி எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.